அவரும், அவரின் மனைவியும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இது இசை ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து தான் நலமாக இருப்பதாக ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டார்.
ஆனால், 2 நாட்களுக்கு முன்பு அவரின் உடல்நிலை மோசமானதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் இருப்பதாக கூறப்பட்டது. எனவே, இளையராஜா, பாரதிராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல பிரபங்கள் அவர் விரைவில் குணமடைந்து திரும்பவேண்டும் என பிரார்த்தனை செய்தனர். இசை ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அவரின் மகன் சரண் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘எனது தந்தைக்கு மருத்துவமனையின் 3வது மாடியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சையை அடுத்து தற்போது அவருக்கு மூச்சுத்திணறல் இல்லை. முன்பை விட தற்போது அவரின் உடல்நிலை நன்றாகவே இருக்கிறது. இது எங்களுக்கும் ,மருத்துவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர் கண் திறந்து பார்க்கிறார்.எங்களை அடையாளம் கண்டு கொள்கிறார். அவர் முழுமையாக குணமடைய இன்னும் ஒரு வாரம் ஆகலாம். எல்லோரும் மீண்டும் பிரார்த்திப்போம். என் தாய் நன்றாக குணமடைந்து விட்டார். இன்னும் ஒரிரு நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார். என் தந்தை விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். எல்லோரின் அன்புக்கும் நன்றி’ என அதில் கூறியுள்ளார்.
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…