தேசத்துரோக வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் தனது ஆட்சிக்காலத்தில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியதற்காக அவருக்கு எதிராக தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்குப்பாகிஸ்தான் ராணுவம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இப்போது துபாயில் இருக்கும் முஷாரப் வீடியோ மூலம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதில் ‘வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நானோ எனது வழக்கறிஞரோ வாதிட அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு சந்தேகத்திற்குரியது என முழுமையாக நான் நம்புகிறேன். எனக்கு எதிரான ஒருசிலரின் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது உயர் பதவிகளில் உள்ளனர் ’ எனத் தெரிவித்துள்ளார்.
கோட் திரைப்படத்திற்குப்…
கடந்த 10…
தற்போது தமிழ்…
விஜயின் ஜனநாயகன்…
இறுதிச்சுற்று., சூரரைப்போற்று…