More

பாலிவுட் நடிகரே மாஸ்டருக்காக வெயிட்டிங்காம்… நீங்களும் தளபதி பேன்னா..

தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா என ஒரு நடிகர் பட்டாளமே படத்தில் இருக்கிறது. வரும் பொங்கல் தினத்தில் அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

Advertising
Advertising

ஏற்கனவே கொரோனா அச்சத்தில் பல படங்கள் வெளியாகாமல் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். அதிலும், விஜயின் மாஸ்டரை தான் பலரும் மிஸ் செய்தனர். இதற்காக படக்குழு ரசிகர்களை குஷிப்படுத்த ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, தினமும் ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. 

இந்நிலையில், மாஸ்டர் படத்துக்காக வெயிட் செய்வதாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து, அவர் வெளியிட்டு இருக்கும் ட்வீட்டில், மை ப்ரண்ட் விஜய், நான் மாஸ்டர் படத்தின் ட்ரைலரை பார்த்து மகிழ்ச்சு அடைந்தேன். வருன் ஜனவரி 14ல் இந்தியில் மாஸ்டரை பார்க்க காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

null

 

Published by
adminram

Recent Posts