வயிறு எரியுது எனக்கு!.. தோனி-விஜய் மீட்டிங்கில் கடுப்பான விக்னேஷ் சிவன்...

by adminram |

889540f7fc874871dbd05e6f11e69caa-1-2

கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருப்பவர் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி. கூல் கேப்டனாக வலம் வந்தவர். இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்று தந்தவர். தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் அவரை ‘எங்க தல தோனி’ என செல்லமாக அழைக்கின்றனர். அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக கலந்து கொள்வதற்காக அவர் சென்னை வந்துள்ளார்.

7b3b53e718bff91e43311d411441b12e

இந்நிலையில், நடிகர் விஜயை காண விரும்பிய அவர் பீஸ்ட் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றார். அவரை வரவேற்ற விஜய் கேரவானில் அவரை அமர வைத்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜயுடன் மட்டுமில்லாமல் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் உடனும் தோனி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நெல்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து #Doublebeastmode என பதிவிட்டிருந்தார்.

ab3c3ef3400eccad2ef21aad453459ae

இதற்கு டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘ஒரு வார்த்த சொல்லி இருக்கலாம். என் வயிறு டெம்ப்பரேச்சர் 274 டிகிரி செல்சியஸா இருக்கு. அந்த ஃபைல எனக்கு அனுப்புங்க நெல்சன். நான் போட்டோஷாப் பண்ணிக்கிறேன்’ என சோகமாக பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர். நடிகை நயன்தாராவின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியுடன் நம்மால் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியவில்லையே என்கிற சோகத்தில் அவர் இப்படி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story