விஜய் 69 கேப்டன் பாணியில் வருகிறதா? அந்த நடிகரோட படத்துக்கு எழுதப்பட்ட கதையா?

by ராம் சுதன் |

விஜய் அரசியலில் இறங்குவது ஒரு பக்கம் ரசிகர்கள் மத்தியில் வருத்தமாகவும், ஒருபக்கம் உற்சாகமாகவும் இருக்கிறது. கோட் படத்திற்குப் பிறகு அரசியல் மாநாடு பிரம்மாண்டமாக நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் முழுநேர அரசியலில் இறங்க உள்ளதால் அரசியல் வட்டாரத்திலும் அது பரபரப்பாக பேசப்படும். அதற்கு விஜய் 69 படம் உறுதுணையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் கதை எப்படி உருவாகிறது என்று பார்ப்போம்.

வேட்டி சட்டை கட்டுற படம்னா அதுக்கான அரசியல் களம் கண்டிப்பாக இருக்கும். விஜயகாந்துக்கு ஒரு சின்னக்கவுண்டர் மாதிரி. அவருக்கு முதலில் படத்திற்கு பேண்ட், சர்ட் தான் போடப்பட்டதாம். அதன்பிறகு ராவுத்தர் சொன்னதால் அந்தப் படத்திற்கு வேட்டி சட்டை அணிந்து விஜயகாந்த் கெட்டப்பில் கலக்கி இருக்கிறார்.

அதே போல விஜய்க்கும் இந்தப் படம் முழுவதும் வேட்டி சட்டை தான் கெட்டப்பாக இருக்குமாம். எச்.வினோத் கமலுக்குப் பண்ண இருந்த கதையில் தான் கொஞ்சம் மாற்றம் செய்து இந்தப் படத்தை எடுக்கப் போகிறாராம்.

விஜய் 69 என்று தற்காலிக தலைப்பிட்ட இந்தப் படம் தான் கடைசி படம் என்பதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. இந்தப் படத்தில் பெரும்பாலும் அரசியல் சார்ந்த கதைகளமும், வசனமும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன.

எச்.வினோத் எப்போதும் அவரது படங்களில் சமகால நிகழ்வுகள், செய்தித்தாள்களில் பரபரப்பாக வந்த செய்தியை மையமாக வைத்து எடுப்பது வழக்கம். இந்தப் படத்தில் தமிழக அரசியலா, டெல்லி அரசியலா என்பது தெரியவில்லை. இந்தப்படம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அவருக்கு முக்கியமான படமாகவும், அவரது பிரச்சார படமாகவும் கூட இருக்கலாம்.

எச்.வினோத் சமகால நிகழ்வுகளை வைத்து அருமையாக கதை பண்ணுவார். சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்தை வேட்டி சட்டை கட்ட வைத்தவரே ராவுத்தர் தான். வர்றவங்க கிட்ட அன்பாக பேசு. தோரணையாகவும், கம்பீரமாகவும் இருக்கும் என்று சொன்னவரும் அவர் தான். அதே போல விஜய் 69 படத்திலும் பாதி வேட்டி சட்டை கெட்டப்பில் தான் விஜய் வருவாராம்.

மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Next Story