தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரின் சம்பளம் கிட்டத்தட்ட ரூபாய் 50 கோடி என்றும் அதனால்தான் இவர்கள் இருவரது படங்களின் பட்ஜெட் ரூபாய் 100 கோடியை நெருங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் வெளியான உடன் அந்த படத்தின் வசூல் குவித்த நிலவரங்களை கூறும் ஒரு சிலர் இந்த படத்தின் பட்ஜெட் எவ்வளவு? அதில் அஜித் மற்றும் விஜய் சம்பளம் எவ்வளவு? என்று கூறுவார்கள்
அதில் அஜித்துக்கு 40 முதல் 45 கோடி ரூபாய் என்றும் விஜய்க்கு 50 கோடி ரூபாய் என்றும் கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்று வெளியான ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் 100 புகழ்பெற்ற நட்சத்திரங்கள் பட்டியலில் அஜித் மற்றும் விஜய் வருமானம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
இந்த ஆண்டு விஜய்க்கு 30 கோடி ரூபாய் வருமானம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அவர் நடித்த விளம்பர படங்களின் வருமானமும் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஆண்டு அஜித்தின் வருமானம் ரூ.40 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. அஜித்துக்கு விளம்பரம் மூலம் வருமானம் கிடையாது என்பதால் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் சம்பளம் மட்டுமே ரூ.40 கோடி என தெரிகிறது.
எனவே அஜித், விஜய் ஆகிய இருவருக்கும் ரூ.50 கோடி சம்பளம் என டிராக்கர்களின் தகவல் எல்லாம் வடை என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…
கடந்த 10…
தற்போது தமிழ்…
விஜயின் ஜனநாயகன்…