More

விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்த கலாய் இயக்குனர்…. ஆனா இந்தமுறை காமெடி இல்லையாம்!…

தமிழ் சினிமாவில் உள்ள அபத்தமான காட்சிகளை கிண்டலடித்து தமிழ்படம், தமிழ்படம் 2 ஆகிய படங்களை இயக்கியார் சி.எஸ்.அமுதன். இந்த 2 திரைப்படங்களிலும் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்திருந்தார். ரசிகர்களிடம் இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ஒரு புதிய படத்தை அமுதன் இயக்கவுள்ளார். இப்படத்தை Infinity film  நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய் ஆண்டனியை வைத்து கோடியில் ஒருவன்,. காக்கி என 2 திரைப்படங்களை தயாரித்துள்ளது.

இந்தமுறை காமெடியை கைவிட்ட அமுதன் முழுக்க முழுகக் கிரைம் திரில்லர் கதையை கையில் எடுத்துள்ளாராம். இந்த கதையை விஜய் ஆண்டனியிடம் அவர் கூறியதுமே அவர் சம்மதம் கூறிவிட்டாராம். 
 

Published by
adminram