பராசக்தி தலைப்பு எனக்குதான் சொந்தம்!. மல்லுக்கட்டும் விஜய் ஆண்டனி!..

by சிவா |
பராசக்தி தலைப்பு எனக்குதான் சொந்தம்!. மல்லுக்கட்டும் விஜய் ஆண்டனி!..
X

Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் நடிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டது. ஜெயம் ரவியும், சிவகார்த்திகேயனும் இணைந்து நடிப்பது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.

சூர்யாவின் புறநானூறு: சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகிய நிலையில், அந்த கதையைத்தான் சிவகார்த்திகேயனை வைத்து சுதா கொங்கரா இயக்குவதாக சொல்லப்பட்டது. 1965ம் வருடம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை இது என சொல்லப்படுகிறது. அதோடு, சிவகார்த்திகேயனின் 25வது படமாக இப்படம் உருவாகி வருகிறது.

பராசக்தி: புறநானூறு என்கிற தலைப்பு சூர்யாவின் 2டி நிறுவனத்திடம் இருப்பதால் சுதாகொங்கராவுக்கு வேறு தலைப்பை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, 1965 என்கிற தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வந்தது. அதன்பின் பராசக்தி என்கிற தலைப்பு வைக்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதற்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இந்த தலைப்பு மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்தான் இன்று காலை விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்திற்கு தெலுங்கில் பராசக்தி என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்து போஸ்டரை வெளியிட்டார் விஜய் ஆண்டனி. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவே பார்க்கப்பட்டது.

விஜய் ஆண்டனி: பராசக்தி என்கிற தலைப்பை சிவாஜி குடும்பம் மற்றும் ஏவிஎம் நிறுவனத்திடம் முறையாக அனுமதி வாங்கியே சுதாகொங்கரா பயன்படுத்தியிருக்கிறார். அப்படி இருக்கும்போது விஜய் ஆண்டனி எப்படி இந்த தலைப்பை தனது படத்திற்கு பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை.

இதுபற்றி விளக்கமளித்துள்ள விஜய் ஆண்டனி ‘பராசக்தி தலைப்பை நான் போன வருடமே பதிவு செய்துவிட்டேன். எனவே இது எங்களுக்கே சொந்தம்’ என சொல்லியிருக்கிறார். விரைவில் இந்த பஞ்சாயத்து பேசி தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story