More

விவேக் சாருக்கு ஒரு ஆசை இருந்தது!… ரகசியத்தை உடைத்த விஜய் ஆண்டனி….

சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி செய்தியாளர்களிடம் பேசிய போது ‘விவேக் சார் போல் ஒரு மனிதரை பார்க்கவே முடியாது. நடுப்பதோடு நின்றுவிடாமல் மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவர். என்னை ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படத்தை அவர் இயக்க விரும்பினார். ஆனால், அதற்குள் அவர் மறைந்துவிட்டார். அவரின் இழப்பு பேரிழப்பு’ என அவர் கூறினார்.
 

Published by
adminram

Recent Posts