இதுக்குதான் வெயிட் பண்ணோம்!.. பிச்சைக்காரன் 2 மாஸ் அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி...

by adminram |

9bf17c1270639fd37805bc30df1bc688-2

இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் விஜய் ஆண்டனி.. சசி இயக்கத்தில் அவர் நடித்து வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது.

இப்படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இம்முறை பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்கவுள்ளார். இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என மாறிய விஜய் ஆண்டனி இப்படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முழுக்கதையும் தற்போது தயாராகி விட்டது. எனவே, கதை புத்தகத்தை வைத்து படத்தின் இன்று காலை பூஜையும் நடத்தப்பட்டது.

இது தொடர்பான புகைப்படத்தை விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Next Story