'GOAT' படத்தில் கேப்டன் இருக்காரா..? பிரேமலதா சொன்னது விஜய்-அ தான்... ஆனா தளபதி விஜய இல்லையாம்கோ...
தமிழ் சினிமாவில் கேப்டன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர் நடிகர் விஜயகாந்த். வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் சிறந்த நடிகராக வலம் வந்தார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே அரசியல் மீது ஏற்பட்ட தாக்கம் காரணமாக தேமுதிக என்ற கட்சியை தொடங்கி அதிலும் வெற்றி கண்டார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும். எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வந்தார்.
பிறகு கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கட்சிப் பணிகள் அனைத்தையும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மேற்கொண்டு வந்தார். இவர் கடந்த வருடம் டிசம்பர் 28ஆம் தேதி தனது 71 வயதில் காலமானார். இவரின் மறைவு தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இவரின் இழப்பை தாங்க முடியாமல் பலரும் கதறி அழுததை நாம் பார்த்திருந்தோம். இந்நிலையில் விஜயகாந்தின் இறப்புக்குப் பிறகு அவரின் புகைப்படத்தை நடிகர் விஜயின் GOAT திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்ததாக தகவல் வெளியானது.
பின்னர் சிறிது நாட்கள் கழித்து பிரேமலதா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தங்களிடம் அனுமதி இல்லாமல் விஜயகாந்தின் புகைப்படத்தை பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதை கேட்ட அனைவரும் விஜய் திரைப்படத்தில் பயன்படுத்தியதற்காக தான் இப்படி பேசுகிறார் என்று கூறி வந்தார்கள்.
மேலும் கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் நடிப்பது சந்தேகம்தான் என்று கூறிவந்த நிலையில் அவர் சொன்னது தளபதி விஜயை அல்ல. அதாவது விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் ஒரு காட்சியில்தான் விஜயகாந்தை பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். அதற்காகத்தான் பிரேமலதா அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.