நடிகர் விஜய் ஆண்டனி தற்போது லாக்டவுன் நாட்களைப் பயன்படுத்தி பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதிவருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, நடிப்பில் கால் பதித்தவர் விஜய் ஆண்டனி. இப்போது தமிழ் சினிமாவில் 4 படங்களுக்கு மேல் நடித்து வரும் கொரோனாவால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக 25 சதவீத சம்பளத்தைக் குறைத்துக் கொண்டுள்ளார்.
இப்போது லாக் டவுன் காரணமாக எந்தவொரு சினிமா படப்பிடிப்புகளும் நடக்காததால் விஜய் ஆண்டனி திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுவும் அவர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் எனும் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையாம். பிச்சைக்காரன் படத்தின் வெற்றியே விஜய் ஆண்டனியை தமிழ் சினிமாவில் ஒரு கவனிக்கத்தகுந்த நாயகனாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…