வரும் 2026 சட்டமன்ற தேர்தலை தனது தொண்டர்கள் பலத்துடன் தைரியமாக எதிர் கொள்ள இருக்கிறார் விஜய். அதற்காக சமீப காலமாக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவருடைய இலக்கே 2026 சட்டமன்ற தேர்தலை வெற்றி கொண்டு தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்பதுதான். இந்த நிலையில் மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணியில் விஜய் தற்போது இறங்கியுள்ளார் .
இவருடைய கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் தனது மாவட்ட பொறுப்பாளர்களுடன் பல ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் விஜய் தானே மாவட்ட பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து நேர்காணல் நடத்தி வருகிறார். இரண்டு கட்டங்களாக மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்கும் வகையில் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான பொறுப்புகள் வழங்கப்பட்டு விட்டன.
இன்று மூன்றாம் கட்ட நேர்காணல் நடத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் 19 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் விஜய் யாரும் களத்திற்கு செல்ல தயங்க கூடாது .பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். உங்கள் உழைப்பில் தான் நம் கட்சியின் வளர்ச்சி உள்ளது. நானும் உழைக்கிறேன். நீங்களும் உழையுங்கள் என்று பல வகைகளில் பேசியுள்ளார் விஜய்.
தனது தொண்டர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் விதமாக அவருடைய பலவிதமான ஆலோசனைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தவெக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக பிரபல மேடைப் பேச்சாளர் ராஜ் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்த உத்தரவை விஜய் பிறப்பித்திருப்பதாக தெரிகிறது. ராஜ் மோகன், பல மேடைகளில் தனது அற்புதமான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர். விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். மக்களுக்கு மிகவும் பரீட்சையமானவர். பேச்சில் திறமைசாலி .இவர்தான் இப்போது தவெக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…