அஜித் மட்டுமில்லாமல் விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய அர்ஜூன்.. இது யாருக்கும் தெரியலயே

by ராம் சுதன் |

15 முறை மோதிய விஜய் அர்ஜூன்: நேரடியாக மோதிய விஜய் மற்றும் அர்ஜுன் படங்களை பற்றி தான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகிறோம். இதுவரைக்கும் 15 முறை விஜய் படமும் அர்ஜுன் படமும் நேரடியாக மோதியிருக்கின்றன. இதில் என்னென்ன படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. யாருடைய படங்கள் அதிகமாக வெற்றி பெற்றது என்பதையும் இந்த செய்தியில் நாம் பார்க்க போகிறோம். முதன்முறையாக விஜய் மற்றும் அர்ஜுன் படங்கள் எப்போது மோதியது என்றால் 1993 ஆம் வருடம் டிசம்பர் மாதம் .விஜய்யின் செந்தூரப்பாண்டி திரைப்படமும் அர்ஜுனின் ரோஜாவை கிள்ளாதே திரைப்படமும் ரிலீசானது .

முதல் வெற்றி: விஜயகாந்த் மற்றும் விஜய் நடித்த செந்தூரப்பாண்டி திரைப்படம் டிசம்பர் 10ஆம் தேதி ரிலீசானது. இந்த படத்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார் .இந்த படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றதுடன் 100 நாட்களைக் கடந்து படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த திரைப்படமாக மாறியது. அதே சமயம் அர்ஜுன் குஷ்பூ நடித்த ரோஜாவை கிள்ளாதே திரைப்படம். இந்த படத்தின் மீது பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்தது .ஏனெனில் பாட்ஷா அண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா தான் இந்த படத்தையும் இயக்கி இருந்தார்.

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு சரியாக ஓடவில்லை. அதனால் இந்த மோதலில் விஜயின் செந்தூரப்பாண்டி திரைப்படம் தான் வெற்றி பெற்றது. மீண்டும் 1994 ஆம் வருடம் விஜயின் ரசிகன் திரைப்படமும் அர்ஜுனனின் மேட்டுப்பட்டி மிராசு, சாது என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. விஜய் சங்கவி நடித்த ரசிகன் திரைப்படம் ஜூலை எட்டாம் தேதி ரிலீஸ் ஆனது. இதுவும் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படம் தான். இந்த படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது .திரையரங்குகளில் 150 நாட்கள் ஓடிய திரைப்படமாக ரசிகன் திரைப்படம் அமைந்தது.

அதிக முறை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்: அதே சமயம் அனுமோகன் இயக்கத்தில் அர்ஜுன் ராதிகா நடித்த மேட்டுப்பட்டி மிராசு திரைப்படம் எதிர்பார்த்த அளவு சரியாக ஓடவில்லை. அதேபோல் பி வாசு இயக்கத்தில் அர்ஜுன் நடித்த சாது திரைப்படம். இந்தப் படமும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதனால் இந்த மோதலிலும் விஜய்யின் ரசிகன் திரைப்படம் தான் வெற்றி பெற்றது. மறுபடியும் 1995ஆம் ஆண்டு விஜயின் தேவா படமும் அர்ஜுனின் முதல் உதயம் திரைப்படமும் மோதியது. விஜய் சுவாதி நடித்த தேவா திரைப்படம் பிப்ரவரி 15ஆம் தேதி ரிலீசானது. இந்த படத்தையும் எஸ் ஏ சந்திரசேகர் தான் இயக்கினார்.

இதுவும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படமாக மாறியது. அதேபோல் அர்ஜுனின் முதல் உதயம் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இந்த மோதலிலும் விஜய் தான் வெற்றி பெற்றார் .மறுபடியும் இதை 1995ம் வருடம் விஜய்யின் சந்திரலேகா திரைப்படமும் அர்ஜுனின் குருதிப்புனல் திரைப்படமும் ஒன்றாக மோதியது. இதில் விஜய் வனிதா நடித்த சந்திரலேகா திரைப்படம் அக்டோபர் 23ஆம் தேதியில் ரிலீசானது .இளையராஜா இசையில் இந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

அர்ஜூனின் முதல் வெற்றி: அதேசமயம் பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் உருவான குருதிப்புனல் திரைப்படத்தில் அர்ஜுன் கமலும் நடித்திருந்தார். இது மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படமாக மாறியது .அதனால் இந்த மோதலில் அர்ஜுன் முதன் முறையாக வெற்றி பெற்றார். மீண்டும் 1996 ஆம் ஆண்டு விஜயின் மாண்புமிகு மாணவன் திரைப்படமும் அர்ஜுன் நடித்த செங்கோட்டை திரைப்படமும் ஒன்றாக மோதியது. இதில் மாண்புமிகு மாணவன் திரைப்படம் சுமாரான வரவேற்பு தான் பெற்றது. அதே சமயம் அர்ஜுன் நடித்த செங்கோட்டை திரைப்படமும் சுமாரான வரவேற்பை தான் பெற்றது. அதனால் இந்த மோதலில் இருவருக்குமே வெற்றி உறுதியாக வில்லை .

அதன் பிறகு 1997 ஆம் ஆண்டு விஜய்க்கு லவ் டுடே திரைப்படமும் அர்ஜுனுக்கு அடிமைச்சங்கிலி திரைப்படம் வெளியானது. இதில் விஜய் நடித்த லவ் டுடே திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாக மாறியது. அதிலும் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். அதே சமயம் அடிமைச்சங்கிலி திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. அதனால் இந்த மோதலில் விஜய் வெற்றி பெற்றார்.

இதேபோ விஜய் நடித்த நிலாவே வா திரைப்படமும் அர்ஜுன் நடித்த தாயின் மணிக்கொடி திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பை தான் பெற்றது .அதற்கு அடுத்தபடியாக விஜயின் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படமும் அர்ஜுன் நடித்த மன்னவரு சின்னவரு திரைப்படமும் ஒன்றாக ரிலீசானது .இதில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் எந்த அளவு ஒரு வரவேற்பை பெற்றது என அனைவருக்கும் தெரியும் .இந்த மோதலில் விஜய் மீண்டும் வெற்றி பெற்றார் . இப்படி 15 முறை மோதி இந்த போட்டியில் விஜய்தான அதிக வெற்றிபெற்றிருக்கிறார்.

Next Story