மூட் அப்செட்டில் விஜய் – சென்னைக்குத் திரும்பிய மாஸ்டர் டீம்!

விஜய் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரி ரெய்டு நடந்து வரும் சூழலில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போகவுள்ளது.

பிகில் படத்தின் மூலம் வந்த வருவாயில் முறைகேடு நடந்திருப்பதாக விஜய், தயாரிப்பு நிறுவனமான ஏ ஜி எஸ் மற்றும் படத்துக்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று தொடங்கிய ரெய்டு இன்றும் நடந்து வருகிறது. இதில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் முறையான அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்நிலையில் நெய்வேலியில் இருந்த விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து வந்துள்ள நிலையில் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. விஜய் மீண்டும் சொல்லும் வரை படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளது படக்குழு. இதனால் நெய்வேலியில் இருந்து தொழிலாளர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் சென்னைக்கு திரும்ப உள்ளனர்.

Published by
adminram