ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க முடியாது – நீதிமன்றத்தில் விஜய்

Published on: July 28, 2021
---Advertisement---

4e1dc170da9252777418b6a14d6fa804-2

நடிகர் விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு செலுத்தும் நுழைவு வரி தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அவரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் ரூ.1 லட்சம் அபாரதமும் விதித்து தனி நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த அபாரத தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதோடு, திரைப்படங்களில் சமூக நீதிக்கு பாடுபடுவது போல் நடிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோவாக இருக்க கூடாது எனவும் நீதிபதி அறிவுரையும் செய்தார். இதையடுத்து, விஜயை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். நாம் தமிழர் சீமானும் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.இதையடுத்து தன்னை பற்றி நீதிபதி வைத்த விமர்சனத்திற்கு எதிராக விஜய் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

354d3e0520c0fddb7043472b8273d8a3

இந்த வழக்கில் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து 2 அமர்வு கொண்ட நீதிபதிகள் சமீபத்டில் தீர்ப்பளித்தனர்.  மேலும், ஏற்கனவே அவர் 20 சதவீத வரியை செலுத்திவிட்ட நிலையில், மீதமுள்ள 80 சதவீத வரியை அடுத்த ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு லட்சத்தை விஜய் ஏன் நிவாரண நிதியாக வழங்கக்கூடாது என நீதி கேள்வி எழுப்பினார். இதற்கு விஜய் ஏற்கனவே முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை கொடுத்துள்ளார். எனவே மீண்டும் தர விருப்பமில்லை என விஜயின் வழக்கறிஞர் தெரிவித்தார். 

Leave a Comment