லீக்கான அந்த வீடியோ!.. திரிஷாவை அழ வைத்த விஜய்!.. இவ்வளவு நடந்திருக்கா?!...

by ராம் சுதன் |

கார்த்திக், சிம்பு போன்ற கதாநாயகர்கள் சினிமாவிற்கு காலதாமதமாக வருவதாக குற்றச்சாட்டுகள் வருவதுண்டு. அதே போல கதாநாயகிகளும் வருவார்கள். சிவகாசி படத்தில் அசின் ஜோடி சேர்ந்தார். அவர் அந்த சமயத்தில் நல்ல பீக்கில் இருந்தார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதனால் அவர் போக்கிரி படத்துக்கு தேர்வானார். தவிர அவர் சரியான நேரத்திற்கு வந்து விடுவாராம்.

போக்கிரி படத்தில் திரிஷா ஜோடி இல்லைன்னதும் பெரிய விஷயமாகப் பேசப்பட்டது. அவருக்கும் பெரிய அளவில் வருத்;தம் இருந்தது. அந்தப் படம் தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது. விஜயின் சினிமா கேரியரிலேயே மிக முக்கியமான படமாக அமைந்து விட்டது. அந்தப் படத்திற்கான சக்சஸ் மீட் வேலைகள் 3 நாள்களாக நடந்து வருகிறது. ஆனா திரிஷாவுக்கு அழைப்பு இல்லை. அவங்க அம்மா கேட்கும்போது இல்லம்மா லிஸ்ட்ல இல்லைன்னு சொல்லிட்டாங்க.

அப்புறம் டைரக்டர்கிட்ட கேட்டதுக்கு இல்லம்மா விஜய் சார் ஸ்பெஷலா கூப்பிடுவாருன்னு சொல்லிட்டாங்க. இதனால லேண்ட்லைன் பக்கத்துல திரிஷா செல்போனை வச்சிக்கிட்டு காத்துக்கிட்டு இருந்தாங்களாம். விஜய் எப்போ அழைப்பாருன்னு காலையில இருந்தே வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்களாம். போன் வரலன்னதும் திரிஷா அழ ஆரம்பிச்சிட்டாராம்.

சக்சஸ் மீட் நடந்ததும் விஜய்க்கு திரிஷாவோட அம்மா போன் பண்ணினாங்களாம். என்ன தம்பி, ஒரு படம் தோல்வின்னதும் எங்களை ஓரங்கட்டிருவீங்களான்னு கேட்டாராம். இல்லம்மா நாளைக்கு வந்து உங்களை மீட் பண்றேன்னு சொன்னாராம் விஜய். ஒரு ஸ்டார் ஓட்டல்ல மதியம் லஞ்ச் கொடுத்துட்டு விஜய் விளக்கம் சொன்னாராம். அந்த சமயத்தில திரிஷா சம்பந்தமான ஒரு வீடியோ பரபரப்பா ஓடிக்கிட்டு இருந்தது.

அப்போ திரிஷா வழக்குலாம் போடலாம்னு சொல்லும்போது வேணாம். அதை அப்படியே விட்டுருங்கன்னு வழக்கறிஞர்கள் எல்லாம் சொல்லிட்டாங்களாம். அப்போ அவங்க செம பீக்ல இருக்காங்க. போக்கிரி டீம்ல இருக்குறவங்களும் இதைத்தான் சொன்னாங்களாம். நீங்க ஒருவேளை சக்சஸ் மீட்டுக்கு வந்திருந்தா ஒட்டுமொத்த மீடியாவும் உங்க பக்கம் தான் இருக்கும். உங்க கிட்ட அந்த வீடியோ சம்பந்தமான கேள்வி வந்திருக்கும். நீங்க அதுக்கு பதில் சொல்வீங்களா?

நீங்க எது சொன்னாலும் போக்கிரி சக்சஸ் மீட் வந்து இருட்டடிப்பு பண்ணிடும். உங்க மேட்டர் தான் ஹைலைட் ஆகியிருக்கும். இதுக்கு நான் தான் காரணம். வருத்தப்படாதீங்கன்னு விஜயே சொன்னாராம். மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Next Story