அட்லீயிடம் வாய்ப்பு கேட்ட விஜய் – ஷாருக்கான் படத்தில் சிறப்பு தோற்றம்!

தமிழ் சினிமாவின் ஹிட் இயக்குனர் அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி நடைபெற்று வருகிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகை பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு அட்லீயிடம் விஜய் பேசியுள்ளார். உடனே அதற்கு ஓகே சொன்ன அட்லீ ஷாரூக்கானுடன் விஜய் நடனமாடி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஒரு காட்சியை கொடுத்துள்ளாராம். இந்த காட்சி பாலிவுட் மற்றும் கோலிவுட் சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Published by
adminram