மாஸ்டர் பட பாடல்கள் லிஸ்ட் லீக்?.. கொண்டாடும் விஜய் ரசிகர்கள்…
மாஸ்டர் படத்தில் பாடல்கள் இவைதான் என லிஸ்ட் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை தீப்பிடிக்க வைத்தது.
இந்நிலையில், இந்த கொண்டாட்டமே முடிவதற்குள் விஜய் ரசிகர்களுக்கு புதிய இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் லிஸ்ட் இதுதான் என ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. மொத்தம் 10 பாடல்கள் கொண்ட அந்த லிஸ்டில் விஜய் எந்த பாடலையும் பாடவில்லை. இதை படக்குழு இன்னும் உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்