மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்கி வருகிறார். விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
விஜய் பனியன் அணிந்து கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு ஸ்டைலாக நிற்பது போன்ற புகைப்படமும், கையில் துப்பாக்கி, வாயில் குண்டு என ஒரு போஸ்டரும் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், Beast என்கிற டைட்டிலில் விஜயின் வயது ஒளிந்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதாவது ABCD வரிசையில் B – 2ம் இடம், அதன்படி B-2+E-5+ A-1+ S-19+ T-20 = 47 வருகிறது. விஜய் தனது 47வது பிறந்தநாளைத்தான் கொண்டாடினார். எனவே, அதன்படியே Beast என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என சில ஆர்வக்கோளாறு விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதை இயக்குனர் நெல்சன் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்..
இப்படிலாம் எப்படித்தான் யோசிக்கிறாங்களோ!…
கார்த்தி நடிப்பில்…
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…