விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியான நிலையில் இந்த படம் ரூபாய் 300 கோடி வசூல் செய்ததாக சினிமா டிராக்கர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த படம் அதிக பட்ஜெட் காரணமாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் தயாரிப்பாளர் உள்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தால் நஷ்டம் அடைந்ததாகவும் ஒரு செய்தி வெளியானது
இந்த நிலையில் இந்த ஆண்டு அதிக லாபம் தந்த திரைப்படங்கள் என்ற பட்டியல் வெளிவந்துள்ளது. அதில் முதலிடத்தை அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படமும், ‘தடம்’ இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை கோமாளி திரைப்படமும், நான்காவது இடத்தில் எல்கேஜி திரைப்படமும், ஐந்தாவது இடத்தை அசுரன் திரைப்படமும், மற்றும் ஆறாவது இடத்தை கைதி திரைப்படமும், இடம்பிடித்துள்ளன
மிகப்பெரிய வசூல் செய்ததாக கூறப்பட்ட பிகில் மற்றும் பேட்ட ஆகிய திரைப்படங்களில் இந்த லிஸ்டிலேயே இல்லாதது விஜய் மட்டும் ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சினிமா டிராக்கர்கள் பணம் பெற்றுக்கொண்டு வசூலை மிகைப்படுத்தி கூறியுள்ளனர் என்பது இந்த லிஸ்ட்டில் இருந்து தெரிய வந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…