More

விஜய்க்கு செம மச்சம் பாஸ்… தளபதி 65ல் அந்த நடிகையும் உண்டாம்..

விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாது. அப்படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. இப்படம் விஜயின் 65வது திரைப்படமாகும். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ள பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.   

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு 2 ஜோடிகள் உண்டாம். எனவே, பூஜா ஹெக்டே இல்லாமல் மற்றொரு ஹீரோயினும் படத்தில் உண்டாம். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ராஷ்மிகா மந்தனாதான் அந்த ஹீரோயின் என்கிறார்கள். இவர் ஏற்கனவே கார்த்திக்கு ஜோடியாக ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகாகியுள்ளார்.  தளபதி 65ல் நடிக்க அவரை படக்குழு கேட்டிருந்தாலும், அம்மணிக்கு விஜய்கு கால்ஷீட்டை ஒதுக்க முடியாமல் தவிக்கிராராம். எப்படியும் விரைவில் அவர் சம்மதம் தெரிவிப்பார் என படக்குழு கருதுகிறது.
 

Published by
adminram

Recent Posts