விஜய் படத்தைப் பார்க்கத் தயங்கிய பெண்கள் கூட்டம்... அப்புறம் ஹிட்டான கதை தெரியுமா?

தளபதி விஜய் ஆரம்பத்தில் படங்களில் நடிக்கும் போது 'உங்கள் விஜய்' ஆக ஜொலித்தார். அப்போது அவர் சொந்தக் குரலில் பாடல் பாடி டான்ஸ் ஆடுவார். அந்தப் பாடல் திரையில் ஓடும்போது இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு இருப்பவர் உங்கள் விஜய் என எழுத்துக்கள் தோன்றும்.
ஆரம்ப காலகட்டத்தில் விஜயின் படங்கள் என்றாலே கவர்ச்சி விருந்தாகத் தான் இருக்கும். அதனால் பெரும்பாலும் பேமிலி ஆடியன்ஸ் படம் பார்க்க வர மாட்டார்கள். அந்தக் குறையைப் போக்கும் வகையில் வந்தது தான் இந்தப் படம். இதுபற்றி பிரபல இயக்குனர் ராஜகுமாரன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா...
விஜய் இன்னைக்கு 100 கோடி சம்பளம் வாங்குறவரா இருக்கலாம். ஆனா விஜயை குடும்பப்பாங்கான ரசிகர்களையும் ரசித்துப் பார்க்க வைத்த படம் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக தான். அதுல எந்த சந்தேகமும் தேவையில்லை.
விக்ரமன் சார் அமைச்ச அந்தப் பாதை வழியாகத் தான் அவர் நடந்து போயி தான் அவ்ளோ பெரிய ஆளா ஆயிருக்காருங்கறது தான் உண்மை. பூவே உனக்காக படம் வருவதற்கு முன்பே விஜய்க்கு 100 நாள்கள் ஓடிய படங்கள் நிறைய இருக்கு. அவரது முதல் படமே 100 நாள் ஓடிய படம் தான்.
அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் நிறைய இருக்கு. ஆனா பேமிலி ஆடியன்ஸ் வர மாட்டாங்க. உதாரணத்துக்கு பூவே உனக்காக படம் சென்னை கமலா தியேட்டர்ல ஓடுச்சு. ரெண்டு மூணு வாரம் லேடீஸே வரல. ஒன்லி பாய்ஸ் தான். அதுவே எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. படம் ஹவுஸ்புல்லா போகுது. ஆனா பேமிலி ஆடியன்ஸ் அவ்வளவா வரல.

அப்போ தினத்தந்தி நாளிதழ்ல வர்ற விமர்சனம் பெரிசா பேசப்படும். அதுல தான் காதலுக்கு இன்னொரு தேசிய கீதம்னு போட்டாங்க. அப்புறம் தான் அந்தப் படம் 275 நாள் ஓடுச்சு. தேவயாணி கூட ஒரு இன்டர்வியுல சொன்னாங்க. அப்போ விக்ரமனோட அசிஸ்டண்ட் ரவிசங்கர் போயிருக்காரு.
அப்போ இந்தப் பக்கத்து தியேட்டர்ல ஓடிக்கிட்டு இருக்குதே படம். அந்தப் படத்தோட டைரக்டர் விக்ரமன் தான் என்னைக் கதை சொல்ல அனுப்பினாருன்னு தேவயாணிகிட்ட சொன்னாராம். அந்தப் படம் அவ்ளோ பெரிய ஹிட்டுன்னதும் தான் அந்தக் கதையை நான் கேட்டேன் என்று தேவயாணி சொன்னாராம். அது எந்தப் படம்னு கேட்குறீங்களா? அது தான் சூர்யவம்சம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விக்ரமனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் தான் ராஜகுமாரன். அதன்பிறகு 'நீ வருவாய் என' படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பெரிய அளவில் ஹிட் அடித்து அவருக்குப் பெயர் சேர்த்தது. இவர் நடிகை தேவயாணியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.