வருமான வரி அலுவலகத்தில் அன்பு செழியன் ஆஜர்.. அடுத்து விஜய்?

சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜயின் பனையூர் வீடு, பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் அலுவலகம், அப்படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்பு செழியனின் சென்னை அலுவலகம், மதுரை வீடு என மொத்தம் 38 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.300 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்பு செழியனிடமிருந்து ரூ.77 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.   இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அன்புச்செழியன், விஜய், கல்பாத்தி அகோரம் ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று காலை அன்புச்செழியன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதையடுத்து, நடிகர் விஜயும் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படப்பிடிப்பில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கலந்து கொள்வதால் விஜயால் ஆஜராக முடியவில்லை என்றாலும், விரைவில் அவர் நேரில் ஆஜராவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Published by
adminram