">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்ட விஜய் – பின்னணி என்ன?
நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் தனது வேலையை முடித்துக்கொடுத்து விட்டார். ஏப்ரல் 9ம் தேதி படம் வெளியாகிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால் பட வேலைகள் வேகமாக நடந்து வந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால் அனைத்தும் முடங்கியுள்ளன.
இந்நிலையில், விஜயின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரின் வீட்டில் லேண்ட்லைன் நம்பரை கூட யாரும் எடுப்பதில்லையாம். இதனால் ஊடகங்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூட அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். மேலும், தனது பாதுகாவலர்கள், டிரைவர், வீட்டில் பணி புரிபவர்கள் என அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு, தன்னைத்தானே அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
வீட்டில் தனது மனைவி சங்கீதாவுடன் மட்டும் அவர் தங்கியிருக்கிறார். அவரின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் இருக்கிறார். மாஸ்டர் படத்தை முடித்துக்கொடுத்து விட்டு ஜேசப் சஞ்சயை பார்க்க கனடா சென்று விட்டு திரும்பியுள்ளார் விஜய். இதனால் கூட அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.