ஆடியோ லாஞ்சுக்கு முன்னரே வெளியாகும் விஜய்யின் குட்டிக்கதை!

Published on: February 12, 2020
---Advertisement---

612d0a07279de04e255eb2195c2132e7

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் ஆடியோ லான்ச் விழாவை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து பொதுமக்களும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ’மாஸ்டர்’ படத்தின் இடையே நடைபெற்ற வருமான வரி சோதனை மற்றும் பாஜகவினர் செய்த போராட்டம் ஆகியவை குறித்து ’மாஸ்டர்’ படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் விஜய் கண்டிப்பாக ஏதாவது பேசுவார் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்

Also Read

இந்த நிலையில் நேற்று ’மாஸ்டர்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அப்டேட்டில் வரும் 14ஆம் தேதி ’மாஸ்டர்’ படத்தின் ’ஒரு குட்டி கதை’ என்ற பாடல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

விஜய் சொல்லும் குட்டிக்கதை முன்பாகவே ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற குட்டி கதை பாடல் வெளியாக உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் இனி அடுத்தடுத்து அதிரடி அப்டேட்கள் வெளிவந்து விஜய் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment