விஜய் பட நாயகிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ரசிகர்: அம்பலப்படுத்திய நடிகை

0a226f3a417761d5883250a06c0c2855-1

விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவருக்கு ரசிகர் ஒருவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளதும், அந்த குறுஞ்செய்தியை அந்த நடிகை அம்பலப்படுத்தியுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்த நடிகை நந்திதா ஸ்வேதா, விஜய் நடித்த புலி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நடிகை நந்திதா ஸ்வேதாவுக்கு ரசிகர் ஒருவர் அவருடைய மொபைல் போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்வேதா, அந்த ரசிகரை அம்பலப்படுத்தும் வகையில் அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ’இப்படியெல்லாம் குறுஞ்செய்தி அனுப்ப இவர்களுக்கு எப்படி மனது வந்தது, இவர்களுக்கு குடும்பம் என்று ஒன்று இல்லையா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நந்திதாவின் இந்த சமூக வலைதள பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

Related Articles

Next Story