கேரளாவிலும் வசூலை குவிக்கும் விஜய் படங்கள்….காண்டாகும் மலையாள நடிகர்கள்….

Published on: July 20, 2021
---Advertisement---

354d3e0520c0fddb7043472b8273d8a3

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் சம்பளம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் சம்பளத்தை நெருங்கி விட்டது. அதாவது அவர் ரூ.100 கோடி சம்பளம் பெறும் நடிகராக மாறியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூலை வாரி குவித்துள்ளது. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

552951f67974fa11e8ff1cf7610c76c3

இவரின் திரைப்படங்கள் தமிழகத்தில் மட்டுமில்லாமால் கேரளாவிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மலையாள சினிமா உலகில் மோகன்லாலுக்கு அடுத்து அதிக ரசிகர்கள் விஜய்க்கு உள்ளனர். மம்முட்டி, பிரித்திவிராஜ், பஹத் பாசில், திலீப் உள்ளிட்ட பல நடிகர்கள் இருந்தாலும், விஜய் படம் வெளியானால் அது வசூலில் சக்கை போடு போடுகிறது. இதன் காரணமாக முதல் நாள் வசூலில் முதல் 5 இடங்களை பிடித்த திரைப்படங்களில் 2 விஜய் நடித்ததாக இருக்கிறது.

இத்தனைக்கும் விஜய் திரைப்படங்கள் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாவதில்லை. அப்படியே தமிழில்தான் வெளியாகிறது. ஆனாலும், மலையாள ஹீரோக்களுக்கு இணையாக அங்கு விஜயை ரசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment