சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜயின் பனையூர் வீடு, பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் அலுவலகம், அப்படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்பு செழியனின் சென்னை அலுவலகம், மதுரை வீடு என மொத்தம் 38 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.300 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்பு செழியனிடமிருந்து ரூ.77 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அன்புச்செழியன், விஜய், கல்பாத்தி அகோரம் ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இதில் விஜயை தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அதன்பின், 2 நாட்களுக்கு முன்பு மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜயின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிகில் திரைப்படம் தொடர்பான ஆவணங்கள் குறித்து சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…