கையை வச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்!.. கெட்டுப்போன சமந்தா பெயர்!.. ஆளை மாற்றிய விஜய்?..

by Saranya M |

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 69-வது படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அந்த படத்திலிருந்து சமந்தா நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிப்பட தொடங்கியுள்ளது. அதற்கு காரணம் சமீபத்தில் நடிகை சமந்தா செய்த செயல்தான் என்கின்றனர்.

விஜய் நடித்த கத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சமந்தா நடித்திருந்தார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒரு ஹீரோயினாக சமந்தா நடித்தார்.

நான்காவது முறையாக மீண்டும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா தளபதி 69-வது படத்தில் நடிக்கப் போவதாக கூறப்பட்டு வந்த நிலையில், சோசியல் மீடியாவில் திடீரென சமந்தாவுக்கு எதிராக கிளம்பிய சர்ச்சைகள் அவரது பட வாய்ப்புக்கு ஆபத்தாக மாறிவிட்டதாக கூறுகின்றனர்.

ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசித்தால் காய்ச்சல் உள்ளிட்ட நோய் குணமடையும் என தனக்கு ஒரு மருத்துவர் மாற்று மருந்து கொடுத்ததாகவும், பல கோடி ரூபாய் செலவு செய்து நான் கற்றுக் கொண்டதை மக்களுக்கு இலவசமாக சொல்லித் தருகிறேன் என சமந்தா பதிவிட்டதற்கு எதிர்த்து லிவர் டாக்டர் என்பவர் சோஷியல் மீடியாவில் சமந்தா தவறான மருந்தை அமெரிக்க ஆஸ்துமா கழகமே தடை செய்த விஷயத்தை பரிந்துரைத்துள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட சமந்தா அதற்கு கோபப்பட இருவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன.

சமந்தா மாற்று மருந்துகளை பரிந்துரைப்பதற்கு பின்னாடி ஒரு பெரிய பிசினஸ் டீலிங் இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என சர்ச்சை வெடித்த நிலையில், சமந்தாவுக்கு பதிலாக விஜய்க்கு ஜோடியாக வேறு நடிகையை பார்க்க விஜய் தரப்பு சொல்லி விட்டதாக ஷாக்கை கிளப்பி உள்ளனர்.

Next Story