விலகிய இயக்குனர்!. டைரக்டர் அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி?!. இது சரியா வருமா?!..

Vijay sethupathi: ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். ஹீரோயிசம் காட்டாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் இயல்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
ஹீரோ என்றால் அழகான கதாநாயகி, அவருடன் 4 பாடல், ஒரு குத்து பாடல், 4 சண்டை காட்சிகள், மிரட்டலான வில்லன், பன்ச் வசனம் என எல்லோரும் ஆசைப்படும்போது விஜய் சேதுபதி அதற்கெல்லாம் ஆசைப்படாமல் வேறு ரூட்டில் போனார். வித்தியாசமான கதை, அதில் இயல்பான நடிப்பு என நம்பிக்கை கொடுத்தார்.
வில்லன் அவதாரம்: இதனால் பல புதிய இயக்குனர்கள் விஜய் சேதுபதி பக்கம் போனார்கள். பல பரிசோதனை முயற்சிகளையும் விஜய் சேதுபதி செய்து பார்த்தார். ஹீரோவாக ஹிட் கொடுத்து கொண்டிருந்த போதே வில்லனாக நடிக்க துவங்கினார். அப்படி அவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அதன்பின் விக்ரம், ஜவான் போன்ற படங்களிலும் வில்லனாக நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என கலக்கி வருகிறார். காக்கா முட்டை திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை என்கிற திரைப்படத்தை இயக்கினார்.
இயக்குனர் மணிகண்டன்: அதேபோல், மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி படத்திலும் விஜய் சேதுபதி ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார். எனவே, அவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே நல்ல நட்பு உண்டானது. இருவரும் சேர்ந்து ஒரு வெப் சீரியஸை உருவாக்க திட்டமிட்டனர். ஒரு வருடத்திற்கு முன்பே இதுபற்றி பேசினார்கள்.
தற்போது அது டேக் ஆப் ஆகும் நிலையில் அதிலிருந்து மணிகண்டன் விலகிவிட்டாராம். எனவே, விஜய் சேதுபதியே இந்த வெப் சீரியஸை இயக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம், விஜய் சேதுபதியின் கையில் பல திரைப்படங்கள் இருக்கிறது. வெப் சீரியஸ் என்றால் எடுத்து முடிக்க பல மாதங்கள் ஆகும். எனவே, விஜய் சேதுபதி அதை செய்வாரா என்பது தெரியவில்லை. அதேநேரம், அந்த வெப்சீரியஸுக்கு அவர்தான் தயாரிப்பாளர் என்பதால் அவரே இயக்கினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.