More

மாரிசெல்வராஜியின் கையில் முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி – வைரல் வீடியோ

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். தனுஷை வைத்து அவர் இயக்கிய‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. 

Advertising
Advertising

இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று நேர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அந்த எதிர்பார்ப்பை கர்ணன் பூர்த்தி செய்துள்ளது. விமர்சகர்களும், திரையுலகில் பலரும்  இப்படத்தை பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில், இப்படத்தை நடிகர் விஜய்சேதுபதி சமீபத்தில் பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது அங்கு நின்றிருந்த கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜை கட்டியணைத்தும், கையில் முத்தம் கொடுத்தும் பாராட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

 

Published by
adminram

Recent Posts