விஜய் பட செட்டில் ரசிகரின் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி !

விஜய் நடிக்கும் தளப்தி 64 படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிமோகாவில் நடைபெற்று வரும் நிலையில் அதில் விஜய் சேதுபதி கலந்துகொண்டுள்ளார்.

பிகில் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தற்போது அந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் ரசிகர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். கர்நாடகாவில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் சிறை சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் பட இருக்கின்றன. ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்ததை அடுத்து விஜய் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Published by
adminram