22 படங்களை கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதி… மனுஷன் தூங்குவாரா? மாட்டாரா?..

பல வெற்றிபடங்களில் சின்ன சின்ன வேடத்தில், கூட்டத்தில் ஒருவராக நடித்த விஜய் சேதுபதி மெல்ல மெல்ல உயர்ந்து கதாநாயகனாக மாறினார். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது.

எனவே, நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் மசாலா ஹீரோவாக மாறினார். கதாநாயகன் மட்டுமில்லாமல், வில்லன், குணச்சித்திர வேடம், சிறப்பு தோற்றம் என கதாபாத்திரம் நன்றாக இருந்தால் எல்லாவற்றிலும் நடித்தார். அதோடு, தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இவரை நடிக்க வைக்க இயக்குனர்கள் விரும்புகிறார்கள். ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்து விட்டார். 

ஒருபக்கம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். The family man 2 திரைப்பட இயக்குனரின் அடுத்த வெப்சீரியஸில் விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், தற்போது விஜய்சேதுபதி தனது கையில் 22 படங்களை வைத்துள்ளாராம். இதுபோக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ஒரு சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளார். எப்படி இவர் எல்லாவற்றுக்கும் விஜய் சேதுபதி எப்படி நேரம் ஒதுக்கிறார்? மனுஷன் தூங்குவாரா? மாட்டாரா? சாப்பிடவாவது நேரம் இருக்குமா? என திரையுலகின் வாயடைத்து போயுள்ளனர்.
 

Published by
adminram