சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படத்தில் விஜய்சேதுபதி?
சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினி முருகன்’ மற்றும் ’சீமராஜா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படமும் வழக்கம்போல் அவரது பாணியில் கிராமத்து காமெடி காதல் கதை என்றும் சிவகார்த்திகேயனுக்காக எழுதிய இந்த படத்தின் கதையை தற்போது விஜய் சேதுபதிக்காக சில மாற்றங்கள் செய்து கொள்ளவும் பொன்ராம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் பிப்ரவரியில் வெளிவரும் என்றும் மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
விஜய் சேதுபதி தற்போது மாஸ்டர்’ உள்பட ஒருசில படங்களில் பிஸியாக இருப்பதால் அவர் மே மாதம் இந்த படத்திற்காக கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும், இந்த படத்தில் அவரது காட்சிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரே மாதத்தில் படமாக்கப்பட்டு முடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சசிகுமார் நடித்துள்ள ’எம்ஜிஆர் மகன்’ என்ற படத்தை தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது