மீண்டும் ராமுடன் இணையும் ஜானு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழில் கடந்த 2018ல் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. பள்ளி பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்தது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை பார்த்து அழாத ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது.
 
பிரேம் குமார் இயக்கியிருந்த இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்திருந்தார்.  இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆக அமைந்தது. இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை அடுத்து கன்னடா மற்றும் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. 

தெலுங்கிலும் இப்படத்தை பிரேம் குமாரே இயக்கியயிருந்தார். 96 படமானது கன்னடத்தில் கணேஷ், பாவனா நடிப்பில் 99 ஆகவும் தெலுங்கில் ‘எங்கேயும் எப்போதும்’ சர்வானந்த், சமந்தா நடிப்பில் ஜானு என்கிற பெயரிலும் வெளியாகியிருந்தது.

வெறும் 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 50 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புடைத்திருந்தது. தற்போது இப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். 

இந்தப்படமும் 96 போலவே காதலை மையாக=மாக வைத்து உருவாகி வருகின்றதாம். இதிலும் த்ரிஷா நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தப்படம் 96 படத்தின் இரண்டாவது பாகமாக இருக்கலாம் என இப்போதே இந்த படத்தை சுற்றி வதந்திகள் வர ஆரம்பித்துவிட்டது.

vijaysethupathi-trisha

விஜய் சேதுபதி தற்போது கமலுடன் விக்ரம் மற்றும் லாபம், துக்ளக் தர்பார் உட்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிரகிற். த்ரிஷா தற்போது கர்ஜனை, சதுரங்க வேட்டை-2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram