மகளாக நடித்தவருடன் ஜோடி சேர மாட்டேன்.. பிரபல நடிகர்! இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா.!!
இன்றைய தேதியில் தமிழில் டஜன் கணக்கில் படங்களில் நடித்துவரும் பிஸியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
சமீபகா காலமாக இவர் தமிழ் தவிர, பிறமொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் தெலுங்கில் 'உபெனா' என்ற படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது இவர் நடித்துள்ள லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் துக்ளக் தர்பார் படம் நேரடியாக டிவியில் வெளியாக உள்ளது. இதுதவிர கடைசி விவசாயி, மாமனிதன் ஆகிய படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

தற்போது விஜய் சேதுபதி புதுச்சேரியில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
தெலுங்கில் இவர் நடித்திருந்த 'உபெனா' படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி என்ற அறிமுக நடிகை நடித்திருந்தார். தற்போது விஜய் சேதுபதி தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் கீர்த்தி ஷெட்டியை அவருக்கு ஜோடியாக நடிக்கவைக்க எண்ணினார்களாம்.

இதை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, அவர் எனக்கு மகளாக நடித்துள்ளார். அவருடன் என்னால் ஜோடியாக நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம். இதை கேள்விப்பட்ட கீர்த்தி ஷெட்டி அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம். ரஜினியெல்லாம் அவருடன் குழந்தையாக நடித்த மீனாவுடன் ஜோடியாக மூன்று படங்களில் நடித்துவிட்டார். ஆனால், இந்த மனுஷன் இப்படி இருக்கிறாரே என கோலிவுட்டில் முணுமுணுக்கிறார்களாம்.