அவர் வேண்டாம் என கூறிவிட்டதால் எனக்கு கிடைத்தது: பிரபல நடிகர் மகிழ்ச்சி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன் , சிறப்பு தோற்றம் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார். இன்று உச்ச நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் பெரும் கஷ்டங்களை சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த இடத்தை பிடித்துள்ளார்.
அப்படி அவர் ஆரம்ப காலத்தில் வாய்ப்புக்காக எவ்வளவு கஷப்பட்டார் என்ற அனுபவத்தை குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துக்கொண்டார். அதில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் 5 நண்பர்களில் ஒருவராக நடிக்க என் புகைப்படங்களை அனுப்பி வைத்தேன். ஆனால் அந்த வாய்ப்பு நடிகர் மணிகண்டனுக்கு போனது.
அதே போல் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்க நான் முயற்சித்தபோது அந்த வாய்ப்பும் மணிகண்டனுக்கே போனது. ஆனால், அவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என கூறிவிட்டதால் எனக்கு கிடைத்தது நல்ல வேலை அவர் வேண்டாம் என கூறினார் என கூறி சிரித்தார்.