சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்கும் விஜய்சேதுபதி?

இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் நானி தயாரித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இந்த படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மாஏற்கனவே தெரிவித்திருந்தார் 

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை தயார் ஆகிவிட்டதாகவும் விரைவில் தயாரிப்பாளர் கிடைத்ததும் இந்த படத்தை இயக்க ஆரம்பிக்க உள்ளதாகவும் பிரசாந்த் வர்மா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இருப்பினும் இந்த படத்திற்கான சரியான தயாரிப்பாளர் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் 'AWE' படத்தின் வெற்றியையும் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையும் கேள்விப்பட்ட விஜய்சேதுபதி இந்த படத்தை தானே தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் அதுமட்டுமன்றி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது

விஜய் சேதுபதி ஏற்கனவே பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் சிறப்பு வேடங்களிலும் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram