More

வேற லெவலுக்கு போன விஜய் சேதுபதி – செம காண்டில் தமிழ் சினிமா நடிகர்கள்….

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. இவரின் கால்ஷீட் புக் எப்போதும் ஃபுல்லாகவே இருக்கிறது. அந்த அளவுக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது. இது போக லாபம், துக்ளக் தர்பார் என தொடர்ச்சியாக அவர் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

மேலும், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு அழைப்புகள் வருகிறது. சமீபத்தில் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஹிந்தியில் ஹிட் அடித்த ‘அந்தாதூண்’ பட இயக்குனரின் அடுத்த படம் இது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது சக நடிகர்களுக்கு வயித்தெரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். 

அந்த அடம் போக, ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் ‘மாநகரம்’ படத்திலும் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts