விஜய், விஜய்சேதுபதி இல்லாத ‘மாஸ்டர்’ படத்தின் அடுத்த போஸ்டர்!

தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் செகண்ட்லுக் வெளிவர உள்ளது. இந்த செகண்ட்லுக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இடம் பெற்று இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த போஸ்டருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் விஜய் விஜய் சேதுபதியை தவிர  ‘மாஸ்டர்’ படத்தில் பணிபுரிந்த பலர் உள்ளனர். இதனால் விஜய், விஜய்சேதுபதி ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் 

இருப்பினும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனரும், மாஸ்டர் படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான ரத்னகுமார், ‘தளபதி விஜய் இந்த போஸ்டரில் இல்லையே என யாரும் திட்ட வேண்டாம். இன்று மாலை 5 மணிக்கு தளபதி விஜய் அட்டகாசமாக வருகிறார்’ என்று விஜய், விஜய் சேதுபதி ரசிகர்களை சமாதானபடுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram