மீண்டும் விஜய் படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்: விரைவில் ஆச்சரிய அறிவிப்பு!

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் பிப்ரவரியில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

6d19653ab0f53c2b9463c24611a55135

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் பிப்ரவரியில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் மார்ச் மாதமே ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து ’தளபதி 65’படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

’தளபதி 65’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சமீபத்தில் விஜய் நடித்த ’சர்க்கார்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், இந்த படம் 2020ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது 

தளபதி விஜய், ஏஆர் முருகதாஸ், அனிருத் மற்றும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணையும் இந்தப் படம் ’துப்பாக்கி 2’ படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *