6 மணி நேரத்திற்கு 25 லட்சமா? ஆச்சரியப்பட வைக்கும் குக் வித் கோமாளி பிரபலத்தின் வளர்ச்சி…..

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, சிரிச்சா போச்சு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் தான் சின்னத்திரை நடிகர் புகழ். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரது ஃபேவரைட் நிகழ்ச்சியாக மாறியுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியில் இவரது டைமிங் காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் ரம்யா பாண்டியன், பவித்ரா, தர்ஷா குப்தா உள்ளிட்ட நடிகைகளுடன் இவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது. இவரது ஒவ்வொரு செய்கைகளையும் ரசிகர்கள் ரசித்து வந்தனர். இதுவரை இல்லாத அளவிற்கு நடிகர் புகழுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

cook with comali pugazh

இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது ஒரு சில புதிய படங்களில் காமெடி நடிகராக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் இனி வரும் காலங்களில் புகழ் நிச்சயம் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் புகழின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக எங்க சிரி பாப்போம் என்ற புதிய காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சி தான் மறைந்த காமெடி நடிகர் விவேக் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மாயா எஸ்.கிருஷ்ணன், அபிஷேக் குமார், பிரேம்ஜி அமரன், ஆர்த்தி கணேஷ், ஆர்ஜே. விக்னேஷ் காந்த், பவர் ஸ்டார் சீனிவாசன், புகழ், பேகி, ஷ்யாமா ஹரிணி மற்றும் சதீஷ் ஆகிய 10 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

cook with comali pugazh

சுமார் ஆறு மணி நேரம் நடைபெறும் இந்த காமெடி நிகழ்ச்சியில் இறுதி வரை யார் சிரிக்காமல் இருக்கிறாரோ அவர்தான் வெற்றியாளர் என அறிவித்திருந்தனர். மேலும் போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு 50 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் வெளியேற புகழ் மற்றும் அபிஷேக் ஆகிய இருவர் மட்டும் கடைசி வரை கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பட்டம் வென்றனர். 

இவர்கள் இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என பரிசுத் தொகை பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில் குக் வித் கோமாளி மூலம்  பிரபலமான புகழ் வெறும் ஆறு மணி நேரத்தில் தனது திறமையால் 25 லட்சம் சம்பாதித்துள்ளது மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.

Published by
adminram