Categories: latest newstelevision

எல்லாருமே கஷ்டப்பட்டு உழைக்கிறோம்!.. நல்லா இல்லைன்னு சொல்லாதீங்க.. புகழ் உருக்கம்!..

நடிகர் விமல் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான தேசிங்கு ராஜா படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள தேசிங்கு ராஜா 2 படம் வருகின்ற ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நேற்று நடைப்பெற்ற தேசிங்கு ராஜா 2 படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நகைச்சுவை நடிகர் புகழ் உருக்கமாக பேசியுள்ள விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் எழில் இயக்கியுள்ள தேசிங்குராஜா 2 படத்தில் விமல், புஜிதா பொன்னாடா, ஜனா, ரவி மரியா, ரோபோ சங்கர், சிங்கம்புலி, கிங்ஸ்லி, புகழ், ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். படத்தின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் நடிப்பும் பார்வையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆடியோ லான்ச்சில் பேசிய புகழ், குக் வித் கோமாளியில் இருக்கும் அந்த துடிப்பு படத்தில் இல்லையே என பலரும் கேட்பார்கள், இப்படத்தில் இயக்குனர் எழில் என்னை சுதந்திரமாக நடிக்க விட்டுட்டார், அவர் வெறும் ஆக்‌ஷன் கட்டுன்னு மட்டும்தான் சிரிச்சிக்கிட்டே சொல்லுவாரு. சசிகுமார் மற்றும் விமல் இருவரும் எந்த ஒரு போட்டி பொறாமையும் இன்றி என்னிடம் நல்லா பழகுறாங்க. படக்குழுவில் அனைவரும் எனக்கு கை கொடுத்து உதவினர்.

ஒரு படம் எடுக்கனும்னா அத்தனை பேரும் உழைக்கிறார்கள். ஆனால், ஒரே வார்த்தையில் படம் நல்லா இல்லன்னு ஈசியா சொல்லிட்டு போயிடுறீங்க. எல்லாரும் படத்தை போய் பாருங்க நல்லா இல்லனா சொல்லுங்க நாங்க கண்டிப்பா அதை மாத்திக்கிறோம் என உருக்கமாக பேசியுள்ளார். மேலும், படத்தில் புகழ் லேடி கெட்டப்பில் பெண் குரலில் பேசி நடித்து அசத்தியுள்ளாராம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

8 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

10 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago