விஜய் டிவி ஆங்கரின் அதிவேக வளர்ச்சி…. கார் வாங்கிய சந்தோஷத்தை பகிர்ந்த பதிவு!

விஜய் தொலைக்காட்சியில் நுழைந்துவிட்டாலே போதும் சினிமாவில் தான் நினைக்கும் இடத்தை தொட்டுவிடலாம் என கனவுகளோடு வாய்ப்பை தேடுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். டிடியில் ஆரம்பித்து பிரியங்கா, மகாகபா ஆனந்த் என எல்லோரும் இன்று புகழின் உச்சத்தில் உள்ளனர்.

அந்தவகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ரக்ஷனுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானார் ஜாக்குலின். அதை அடுத்து சீரியல் வாய்ப்பு கிடைக்க தேன்மொழி சீரியலில் நடித்து வருகிறார். இடையிடையே அம்மணிக்கு படவாய்ப்புகளும் கிடைக்க குறுகிய நேரத்தில் ஓஹோன்னு வளர்ந்துவிட்டார். ஆம், அதை வெளிப்படுத்தும் வகையில் kia seltos கார் வாங்கியுள்ள மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
adminram