விக்ரம்' படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை.. வைரலாகும் புகைப்படம்!

by adminram |

7e14104c255c96dd51a99cf48592826c-1

'அவியல்' படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதன்பின் மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கினார். கைதி படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது என்றே கூறலாம். கதாநாயகி கூட இல்லாமல் வெளியான இப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

'கைதி' படத்தின்மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த லோகேஷ்க்கு அடுத்ததாக விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'மாஸ்டர்' படம் லோகேஷின் முந்தைய படங்களின் அளவிற்கு இல்லாமல் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

258842018f65a9316d66d8d411e63382

இதையடுத்து தற்போது உலகநாயகன் கமலை தற்போது இயக்கி வருகிறார் லோகேஷ். 'விக்ரம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

முன்னதாக 1986 ஆம் ஆண்டு சந்திரசேகர் இயக்கத்தில் கமல், அம்பிகா நடிப்பில் வெளியான படம் விக்ரம். 25 வருடங்களுக்கு முன்னாள் வெளியான தன்னுடைய படத்தின் பெயரையே மீண்டும் தன்னுடைய படத்திற்கு வைத்துள்ளார் கமல். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

3e9cbf2a7976458357a5a150017a0c0a-2
nanthini-logesh kanagaraj

இப்படத்தின் நாயகி யார் என அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் புகழ் ஷிவானி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது. இதில் விஜய் சேதுபதிக்கு 3 ஜோடிகள் எனவும் கூறப்பட்டது.

தற்போது விஜய் டிவி புகழ் 'மைனா' நந்தினியும் இப்படத்தில் இணைந்துள்ளார். அவர் தற்போது படப்பிடிப்பு தளத்தில் லோகேஷுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மூன்றாவது நாயகி யார் என்பது இன்னும் தெரியவில்லை.

Next Story