நடிகர் விஜய் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளார். ஆனாலும் மற்ற நடிகர்கள் போல் அவர் தொடர்ந்து பதிவுகளை போடுவதில்லை. புகைப்படங்களையோ, வீடியோக்களை அவர் பகிர்வதில்லை. சமூக பிரச்சனைகள் பற்றியோ அவர் சார்ந்த திரைத்துறை பற்றியோ கூட அவர் பேசுவதில்லை.
தான் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பான முக்கிய அப்டேட்டை மட்டும் அதில் பதிவு செய்து வருகிறார். கடைசியாக அவரின் ‘மாஸ்டர்’ படம் வெளியான போது ஜனவரி 1ம் தேதி #masterfilm என்கிற ஹேஷ்டேக்கை பதிவிட்டிருந்தார். அந்த டிவிட்டை ஒருலட்சத்து 81 ஆயிரம் பேர் லைக் செய்திருந்தனர். 75 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்திருந்தனர்.
ஏறக்குறைய 6 மாதம் கழித்து தற்போது அவர் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பகிர்ந்து #Beast என்கிற ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ளார். இந்த டிவிட்டை அவர் பதிவிட்டு 45 நிமிடத்திற்குள் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 76 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்துள்ளனர்.
கார்த்தி நடிப்பில்…
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…