More

முருகதாஸ் போனா போகட்டும்…முதலில் மாஸ்டர் வரட்டும்… விஜய் போடும் கணக்கு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவிருந்த புதிய படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகியதை தொடர்ந்து அந்த இடத்தை யார் கைப்பற்றப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு திரை வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Advertising
Advertising

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க விரும்பியதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், சில காரணங்களால்  அது கைக்கூடவில்லை. தற்போது விஜய் தரப்பிலிருந்து அவரை தொடர்பு கொண்டார்களாம். ஆனால், சூரி, தனுஷ், சூர்யா ஆகியோரின் திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கவுள்ளதால் இப்போதைக்கு நாம் இணைய முடியாது என வெற்றிமாறன் கூறிவிட்டதாக தெரிகிறது. எனவே, அடுத்து யாரை விஜய் இயக்குனராக தேர்ந்தெடுக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆனால், தற்போதைக்கு அடுத்த இயக்குனரை தேர்ந்தெடுப்பது குறித்து விஜய் யோசிக்கவே இல்லை. மாஸ்டர் திரைப்படம் இதுவரை வெளியாகாமல் இருப்பது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம். எனவே, முதலில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி அப்படம் எவ்வளவு கோடி வசூலிக்கிறது என பார்ப்போம். அதற்கு ஏற்றவாறு அடுத்த படத்தின் பட்ஜெட் மற்றும் இயக்குனரை தேர்ந்தெடுத்துக்கொள்வோம் என விஜய் கருதுவதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. 

Published by
adminram

Recent Posts