More

‘தளபதி 65’ இயக்குனர் இவர்தான் ! – குடும்ப செண்ட்டிமெண்ட் கதைக்கு ஓகே சொன்ன விஜய் ?…

விஜய் நடிக்க இருக்கும் 65 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக நம்பத்தகுந்த இடங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் இப்போது தனது 64 ஆவது படமான மாஸ்டர் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முழு வீச்சாக செய்துவருகிறார். இதையடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை யார் இயக்குவது என்பதுதான் கோலிவுட்டின் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்துவருகிறது.

இந்நிலையில் அதுபற்றி ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது. வரிசையாக கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய குடும்ப திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றவரும் இயக்குனர் பாண்டிராஜ் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து உள்ளதாகவும் அந்த

கதையை தனது அடுத்த படமாக எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Advertising
Advertising

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Published by
adminram

Recent Posts