">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
விஜய் ஏன் டார்கெட்?..எதற்காக சோதனை? – வருமான வரித்துறை விளக்கம்
நடிகர் விஜயிடம் ஏன் சோதனை நடத்தப்பட்டது என வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
நேற்று மாலை திடீரென நடிகர் விஜயின் பனையூர் வீடு, பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் அலுவலகம், அப்படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்பு செழியனின் சென்னை அலுவலகம், மதுரை வீடு என மொத்தம் 38 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை இன்று மாலை வரை நீடித்தது.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.300 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்பு செழியனிடமிருந்து ரூ.77 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்துள்ள வருமான வரித்துறை ‘ பிகில் படம் ரூ.300 கோடி வசூல் செய்ததாக வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திடமிருந்து விஜய் எவ்வளவு வருமானம் பெற்றார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
இப்படத்திற்கு பைனான்ஸ் செய்த பைனான்ஸியரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட ரூ.77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. பிகில் படத்தின் நடித்ததம் சம்பளமாக சில அசையா சொத்துகளையும், பணத்தையும் தயாரிப்பாளரிடமிருந்து விஜய் பெற்றுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது’ என அறிக்கை வெளியிட்டுள்ளது.